இலங்கையில் மரண தண்டனையை மீள அமுல்படுத்தும் ஜனாதிபதி! ஆபத்தில் எதிர்காலம்

Report Print Kamel Kamel in அறிக்கை

காலமாறு நீதியை இலங்கை உறுதி செய்ய வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபையின் வருடாந்த மனித உரிமை அறிக்கையில் இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும்,

கடந்த ஒக்டோபர் மாதம் திடீரென மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் அமர்த்தப்பட்டமை, அரசியல் அமைப்பு குழப்ப நிலைமைகள் என்பன மனித உரிமை மற்றும் காலமாறு நீதி பொறிமுறையை நிலைநாட்டுதல் ஆகியனவற்றின் எதிர்காலத்தை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு வழங்குதல் மற்றும் நீதியை நிலைநாட்டுதல் என்பனவற்றில் இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகள் மிகவும் மெதுவான முன்நகர்வுகளையே பதிவு செய்துள்ளன.

அத்துடன், இரு நாடுகளினதும் அரசாங்கங்களால் அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது கட்டுப்பாடுகள் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகவும், பின் சிவில் அமைப்புக்களின் எதிர்ப்பலை காரணமாக இந்த அழுத்தங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

அத்துடன், கடந்த மார்ச் மாதம் முதல் இலங்கையில் மத வன்முறைகள் தலைதூக்கியுள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மரண தண்டனையை மீள அமுல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளமை குறித்தும் சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.