பரபரப்பாக விற்பனையாகும் 19ஆம் திருத்தச் சட்ட பிரதிகள்

Report Print Kamel Kamel in அறிக்கை

19ஆம் திருத்தச் சட்டத்தின் பிரதிகள் பரபரப்பாக நாட்டில் விற்பனையாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் அரசியல் அமைப்பு குறித்து சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில் 19ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் பெரும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிலையில் அரசாங்க வெளியீட்டு காரியாலயங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 19ஆம் திருத்தச் சட்ட பிரதிகள் விற்றுத் தீர்ந்துள்ளன.

குறிப்பாக காலி பிரதேச சபையின் காரியாலயத்தில் அனைத்துப் பிரதிகளும் விற்கப்பட்டுள்ளன.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த 19ஆம் திருத்தச் சட்டத்தை தெரிந்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சட்டத்தரணிகள், மாணவர்கள், பிக்குகள், தொழில்வான்மையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பிரதிகளை கொள்வனவு செய்து வருவதாகவும், பிரதிகளை கோரி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.