அத்தியாவசிய உணவு பொருட்களை சலுகை விலையில் நுகர்வோருக்கு பெற்றுக் கொள்ளும் வகையிலான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பண்டிகைக்காலத்தின் போதான வாழ்க்கை செலவு தொடர்பில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போதே மேற்படி விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, பண்டிகைக்காலத்தில் நியாயமான விலையில், மக்கள் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான வசதியை ஏற்படுத்தி கொடுக்குமாறும், அத்தியாவசிய பொருட்களுக்கு சந்தையில் தட்டுப்பாடு நிலவாது பார்த்து கொள்ளுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன் சதொச போன்ற பொருட்கள் விற்பனை நிலையங்களினூடாக சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடலில் அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் இதன்போது ஆலோசிக்கப்பட்ட பல விடயங்கள் பண்டிகைக்காலத்தில் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமையும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.