நாட்டு மக்கள் எதிர்நோக்கவுள்ள சிக்கல்

Report Print Sujitha Sri in அறிக்கை

இந்த மாதம் 26ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் லால் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

வகுப்பு பிரச்சினை நீக்கப்படல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்தே இந்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பண்டிகை மற்றும் விடுமுறைக்காலம் தற்பொழுது ஆரம்பமாகியுள்ள நிலையில் விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையால் நாட்டு மக்கள் சிக்கலை எதிர்நோக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை குறித்த போராட்டத்தில் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள், சாரதிகள் மற்றும் நிலைய அதிபர்கள் உள்ளிட்டோர் இணைவதாகவும் தெரியருகிறது.