தமிழர் தலைநகரில் தோன்றியுள்ள அபாயம்! மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Report Print Gokulan Gokulan in அறிக்கை

தமிழர் தலைநகரான திருகோணமலை மாவட்டத்தில் தற்போது இன்புளுவன்சா நோயாளர்கள் இனம் காணப்பட்டு உள்ளதாகவும், இந்த தொற்று நோயானது மேலும் பரவக்கூடிய அபாயம் தோன்றியுள்ளதாகவும் சுகாதார வைத்திய அலுவலக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களின் அன்றாட பயணங்கள் மற்றும் காலநிலை மாற்றங்களே இதற்கான காரணங்கள் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் இன்று சுகாதார வைத்திய அலுவலக அதிகாரிகள் கூறுகையில்,

இன்புளுவன்சா நோயானது வருட இறுதி காலங்களில் பொதுவாக ஏற்படுகின்ற நோயாகும். சுவாசத் தொகுதியை பாதிப்படைய செய்யும் இன்புளுவன்சா நோய் பின்வரும் அறிகுறிகளை காட்டும்.

காய்ச்சல், தலையிடி, தசை நோவு, தொண்டை நோவு, இருமல், மூக்கு வடிதல் அல்லது வாந்தி, வயிற்றோட்டம் என்பவற்றை காட்டும்.

இந்த நோயால் சிறியோர்கள், முதியோர்கள் மற்றும், கர்ப்பிணித் தாய்மார்கள், நீரிழிவு நோயாளர்கள், உயர் குருதி அழுத்தம் உள்ளவர்கள், சிறு நீரக நோயாளர்கள், இதய நோயாளர்கள் ஆகியோர் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகுகின்றனர்.

எனவே சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறும், நோயிற்கான அறிகுறிகள் தென்படுமாயின் தகுதியான ஒரு வைத்தியரை நாடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest Offers