ஜனாதிபதியின் அனுமதியுடன் விரைவில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

Report Print Vethu Vethu in அறிக்கை

சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகளை வெகு விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக அமைச்சர் எம்.ஐ.ஏ.ஹலீம் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர். எனினும் அவர்களை விடுவிப்பதற்கு ஜனாதிபதி இன்னமும் உரிய அனுமதி வழங்கவில்லை.

விரைவில் ஜனாதிபதியின் அனுமதியுடன் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தற்போது வரையில் 106 தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers