பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் பாரிய நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Report Print Sujitha Sri in அறிக்கை

பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் இன்று காலை பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நிலநடுக்கமானது மிண்டானோ தீவு பகுதியில், நிலத்திற்கு கீழ் 59 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

முதலில் குறித்த நிலநடுக்கமானது 7.2ஆக பதிவாகியிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்ட போதும் பின்பு 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமே ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இருந்து 300 கிலோமீற்றர் தொலைவிற்கு பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசிய கடற்பகுதியில் சுனாமி அலைகள் தோன்றுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் போது கட்டடங்கள் குலுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும், ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.