நிஜங்கள் நிறைந்து குறைகள் களையும் ஆண்டாக அமையட்டும்! அங்கஜன் இராமநாதன்

Report Print Vamathevan in அறிக்கை

நிஜங்கள் நிறைந்து குறைகள் களையும் ஆண்டாக அமையட்டும் என முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் அனைவருக்கும் புதுவருட வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

புதிதாய் உதயாமயிருக்கும் இவ்வருடம் மக்கள் சக்தியுடன் தீர்மானமிக்க ஆண்டாக அனைவருக்கும் அமைய வாழ்த்துக்களை வழங்குகிறேன்.

கிழக்கில் உதித்து மேற்கில் சூரியன் மறைந்தாலும், மீண்டும் கிழக்கிலே ஒளிக்கீற்றுடன் புலர்வது போன்று, நமது வாழ்க்கை வட்டதினை சுபிற்சமிக்கதாய் நாம் வெற்றி வாகை சூடுவதற்கு காத்திரமான மனகிடக்கைகளை மாற்றத்துடனும், மனவலிமை தெரிவுடன் ஏற்றம் பெறசெய்தால் உயர்சியான தேர்ச்சிகளை அடைந்து விடலாம்.

பூவுலகில் மண்டலங்களாக வகுக்கப்பட்டிருப்பதை போன்று எமது வாழ்க்கைக்கான வலையங்களையும் திடமான வரைபுகளுடன் வரையறை செய்தால் உரிய இலக்குகளை அடைந்து விடலாம்.

நாம் எதை அதிகமாக உற்றுநோக்குகின்றோமோ அதற்கான சமிக்கைகள் இயல்பாக கிடைத்தாலும் ஒன்றாக பயணிப்பதே உறுதியானதாக அமையும்.

எதிர்மறையாக சிந்திப்பதை விடுத்தும், நிழல்களை தொடராமலும் எமது பழமைகளுடன் புதியனவற்றையும் உள்ளீர்த்து புதிய நிகழ்காலயுகத்தில் நாம் பெறுவனவற்றை இவ் வையகமும், சந்ததியும் பேறாக கருத வேண்டும்.

எம்மோடு கைகோர்த்திருக்கும் மக்களின் எண்ணக்கருவும் அவற்றை நோக்கியதாகவே காணப்படுகின்றது. சுயங்களின் தவாறான புரிதல்களை ஏற்படுத்தியமையின் விளைவு நமது வாழ்க்கை அபிவிருத்தியிலும் பல ஆண்டுகால பின்னடைவுகளையே பிரசவித்துள்ளோம்.

ஒவ்வொரு புதிய ஆண்டும் நிறைந்த எதிர்பார்புக்ளுடன் தடங்களை பதிய முற்படும் போதும் பின்னிலை படுத்தப்பட்டவர்களினால் தொடர்ச்சியாக தளர்வுகளையே அடைமங்களாக ஏற்படுத்தி இருக்கின்றோம்.

நிர்க்கதியாகியிருக்கும் எமது மக்களை வலுவாக்க தவறுகளை நியாயப்படுத்தாமல் குறைகளை நிறைகளாக்கி கொள்ள மக்கள் புரட்சியுடன் நல்லெண்ணங்களை விதைத்து எதிர்பார்ப்புக்களை அறுவடை செய்யும் பொன்னான ஆண்டாக அமைய உறுதி பூணுவோம்.

அலட்சியங்களை விடுத்து எமது எதிர்கால தலைமுறையினரின் இலட்சியங்களை வென்றெடுக்க இலக்குகளை நோக்கி நகர ஆரம்பிப்போம்.

பல்வேறு இடர்களிலிருந்தும் பரிணமித்தது போன்று கடின உழைப்பின் பயனை அனுபவிப்பதோடு மட்டுமல்லாமல் இவ் நூற்றாண்டின் யுகபுருசர்கள் ஆவோம் என வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார்.

Latest Offers