நாட்டு மக்களுக்கான அறிவிப்பு! புழக்கத்திற்கு வந்துள்ள புதிய நாணயக்குற்றிகள்

Report Print Ajith Ajith in அறிக்கை

2019ஆம் வருடத்துக்காக புதிய நாணயக்குற்றிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி ஒரு ரூபா, 2 ரூபா, 5 ரூபா மற்றும் 10 ரூபா நாணயக்குற்றிகள் புழக்கத்திற்கு வந்துள்ளன.

இவற்றை நாட்டின் எந்தவொரு வர்த்தக வங்கியிலும் பெற்றுக்கொள்ள முடியும் என்று நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாணயங்கள் துருப்பிடிக்காத இரும்புக்கலப்பினால் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.