நேரடி ஜனநாயகப் போராட்டங்களையே 2019ஆம் ஆண்டும் எதிர்பார்க்கிறது! வி.உருத்திரகுமாரன்

Report Print Gokulan Gokulan in அறிக்கை

உலக அரங்கில் மக்கள் போராட்டங்களுக்கு வலிமையுண்டு என்பதை மீண்டுமொருமுறை வெளிப்படுத்திக் கொண்ட ஆண்டாக கடந்த 2008ஆம் ஆண்டு அமைந்திருந்த நிலையில், ஈழத்தமிழர் தேசத்திடம் நேரடி ஜனநாயகப் போராட்டங்களையே 2019ஆம் ஆண்டு எதிர்பார்க்கிறது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகப் பாதையில் ஏற்படும் குறைகளைகளையும் மக்களின் நேரடி ஜனநாயகப் போராட்டங்களினால் அரசின் தீர்மானங்களின் மேல் காத்திரமான அழுத்தம் கொண்டுவர முடியும் என்பதையும் இப்போராட்டம் உணர்த்தி நிற்கிறது என அவர் தெரிவித்திருந்தார்.

மலர்ந்துள்ள 2019ஆம் ஆண்டில் ஈழத்தமிழர் தேசம் நேரடி ஜனநாயகப் போராட்டங்களில் தன்னை எழுச்சியுடன் ஈடுபடுத்த வேண்டும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் புத்தாண்டுச் செய்தியில் அறைகூவல் விடுத்துள்ளார்.

ஈழத்தமிழர் தாயகத்திலும் அனைத்துலகிலும் வாழும் தமிழ் மக்களுக்கும், உலகெங்கும் தமது உரிமைகளுக்காகப் போராடும் அனைத்து மக்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்வதில் நிறைவடைகிறேன் என அவர் மேலும் கூறியுள்ளார்.

அறிக்கையினை முழுமையாக படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers