பேர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தடை நீடிப்பு

Report Print Ajith Ajith in அறிக்கை

மத்திய வங்கி முறிவிற்பனை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பேர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்துள்ளது.

இதன்படி, 2019 ஜனவரி 5ஆம் திகதியில் இருந்து 6 மாதங்களுக்கு இந்த தடை அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் தற்போது பிணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers