ஜனாதிபதி முன்னிலையில் ஹிஸ்புல்லா பதவிப் பிரமாணம்! முன்னாள் ஆளுநரின் செய்தி

Report Print Gokulan Gokulan in அறிக்கை

புதிதாக கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைவதாக கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்றைய தினம் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்றைய தினம் விடுத்துள்ள வாழ்த்து செய்தியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், கிழக்கு மாகாண ஆளுநராக இன்றைய தினம் ஜனாதிபதி முன்னிலையில் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பதவிப் பிரமாணம் செய்திருப்பதை வரவேற்று மீண்டும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

கிழக்கு மக்கள் தொடர்ந்தும் பரஸ்பரத்துடன், சகோதரத்துவத்துடன், ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

கிழக்கில் ஆளுநராக கடமையாற்றிய போது எனக்கு வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்களுக்காக மாகாண அரச சேவையாளர்கள், திணைக்கள தலைவர்கள், கிழக்கு மக்கள் உட்பட அனைவருக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன்.

கிழக்கு மாகாணத்திலுள்ள மூவின மக்கள் தொடர்ந்தும், பாதுகாப்புடனும், சுதந்திரமாகவும் வாழ வேண்டும்.

புதிய ஆளுநர் இதற்காக ஒத்துழைப்புக்களை வழங்குவார் என்று எதிர்பார்த்து மீண்டும் மீண்டும் புதிய மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers