பிரதமரின் சொத்துக்கள், பொறுப்புக்கள் தொடர்பான விபரம்! ஜனாதிபதி செயலகத்தின் நடவடிக்கை

Report Print Ajith Ajith in அறிக்கை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சொத்துக்கள், பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை வெளியிடுவதற்கு எதிராக ஜனாதிபதி செயலகம் செயற்படுவது தொடர்பில் ட்ரான்ஸ் பேரன்ஸி இன்டர்நெசனல் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

தகவல்களை அறியும் சட்டத்தின் கீழ் ஜனதிபதியினதும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினதும் சொத்துக்கள் தொடர்பான விபரங்களை ட்ரான்ஸ் பேரன்ஸி இன்டர்நெசனல் கோரியிருந்தது.

எனினும் ஜனாதிபதி பதவியில் இருக்கும்போது அவரின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரம் கோருவதில் பிரச்சினை இருப்பதாக தகவல் அறியும்ஆணைக்குழு அறிவித்திருந்தது.

இந்தநிலையில் பிரதமரின் சொத்துக்கள், பொறுப்புகள் தொடர்பான விபரங்களை வெளியிடுமாறு தகவல் அறியும் ஆணைக்குழு கோரியிருந்தது.

எனினும் ஜனாதிபதி செயலகம் அதனை தடுக்கும் நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்கவின் சொத்துக்களையும், பொறுப்புக்களையும் வெளிப்படுத்துவற்கு எதிராக நீதிமன்றத்துக்கு செல்ல போவதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்திருந்தது.

இந்தநிலையில் இது தொடர்பில் ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளதாக ட்ரான்ஸ் பேரன்ஸி இன்டர்நெசனலின் நிறைவேற்று பணிப்பாளர் அசோக ஒபயசேகர தெரிவித்துள்ளார்.

Latest Offers