இலங்கையில் அறிமுகமான புதிய நடைமுறை! கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வது எப்படி?

Report Print Vethu Vethu in அறிக்கை

கடந்த முதலாம் திகதி முதல் மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடவுச்சீட்டு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

தற்போது அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டு வழங்கும் நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் புதிய கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டியதற்கான புதிய முறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 6 கடிதங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

முதலாவதாக முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் அதற்கான விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ள முடியும் அல்லது பிரதேச செயலகத்திலும் பெற்றுக் கொள்ள முடியும்.

புகைப்படங்கள், பிறப்பு சான்றிதழ், தேசிய அடையாள அட்டை மற்றும் அதன் பிரதி, கடவுச்சீட்டில், தொழில் விபரம் உள்ளடக்கப்பட வேண்டுமாயின் அது தொடர்பான தொழில் சான்றிதழ், திருமணம் செய்த பின்னர் பெயர் மாற்றப்பட்டிருந்தால் அதற்காக திருமண சான்றிதழ் ஒன்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த அனைத்து ஆவணங்களையும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers