வவுனியா தெற்கு வலயத்தின் 22 ஆரம்ப கல்வி ஆசிரியர்களுக்கு இடமாற்றம்

Report Print Thileepan Thileepan in அறிக்கை

வவுனியா தெற்கு வலயத்தில் இருந்து ஆரம்ப கல்வி ஆசிரியர்கள் 22 பேர் வவுனியா வடக்கு வலயத்திற்கு மாகாண கல்வி திணைக்களத்தால் இடமாற்றப்பட்டுள்ளனர்.

இந்த மாதம் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையிலேயே குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுலை மாதம் ஆசிரியர் சேவையின் தரம் - 3 இற்கு உள்ளீடு செய்யப்பட்ட ஆரம்ப கல்வி ஆசிரியர்கள் 22 பேருக்கு வவுனியா வடக்கு வலயத்திற்கு இடம்மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அதிலும் குறித்த 22 ஆசிரியர்களில் அதிகமானவர்கள் வவுனியாவில் பின் தங்கிய செட்டிகுளம் கோட்டத்தில் கற்பித்து வந்தவர்கள்.

செட்டிகுளம் கோட்ட பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடம் உள்ள நிலையில் வவுனியா தெற்கு வலயத்தின் செட்டிகுளம் கோட்ட ஆரம்ப கல்வி ஆசிரியர்களை பிறிதொரு கஸ்டப் பிரதேசமான வவுனியா வடக்கிற்கு மாற்றியுள்ளமை செட்டிகுளம் கோட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, குறித்த ஆசிரியர்களின் நியமனக் கடிதத்தில் நியமனம் வழங்கப்படும் பாடசாலையில் 10 வருடங்கள் கடமையாற்ற வேண்டும் எனத் தெரிவித்திருந்த நிலையிலேயேஅதனை மீறி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக சமூக நலன்விரும்பிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Latest Offers