ஐ.டி.என் தொலைக்காட்சி வளாகத்தில் பதற்றம்! ஊழியர்கள் - பொலிஸாருக்கு இடையில் மோதல்

Report Print Vethu Vethu in அறிக்கை

சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நிர்வாகத்தில் புதிதாக இருவரை இணைத்துக் கொண்டமைக்கு எதிராக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

வளாகத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையினால் வன்முறை சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

இதனை கட்டுப்படுத்த சிறப்பு அதிரடி பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதன்போது ஊழியர்களுக்கும் அதிரடி படையினருக்கும் இடையில் அடிதடி மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

சுயானதீன தொலைகாட்சி நிறுவனத்திலிருந்து இடைநிறுத்தப்பட்ட 13 உறுப்பினர்கள் தலைமையிலான குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers