இலங்கை பாடசாலை கல்வியில் புதிய விடயம்! அரசாங்கத்திற்கு பாரிய வெற்றி

Report Print Kamel Kamel in அறிக்கை

சட்டக் கல்வியை, இலங்கையில் பாடசாலைப் பாடவிதானத்தில் உள்ளடக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சட்ட அறிவினை பாடசாலை மாணவ மாணவியருக்கு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்ததன் மூலம் தற்போதைய அரசாங்கம் பாரியளவில் வெற்றியீட்டியுள்ளதாக நீதி அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.

அரசியல் அமைப்பு, அடிப்படைச் சட்டம் போன்ற விடயங்கள் குறித்து சிறு வயது முதலே அறிவை பெற்று கொடுப்பதன் ஊடாக, வாழும் போது நாள் தோறும் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கூடிய ஆற்றல் உருவாகும் என அவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

அடிப்படை சட்டத்தை போன்றே, குற்றவியல் சட்டம் போன்ற பல்வேறு சட்டங்கள் தொடர்பில் சிறு பிராயத்திலேயே மாணவர்களை தெளிவூட்டுவதன் மூலம் நாட்டில் இடம்பெறக்கூடிய குற்றச் செயல்களை தடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை பாடவிதானத்தில் இந்த சட்டப் பாடங்களை உள்ளடக்குவது குறித்த நடவடிக்கை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் தலைமையில் நடைபெறவுள்ளதாக நீதி அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்துள்ளார்.