கல்வி அமைச்சருக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்த இம்ரான்!

Report Print Abdulsalam Yaseem in அறிக்கை

விளையாட்டு பயிற்சியாளர்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுத்த கல்வி அமைச்சருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார்.

இந்த நியமனத்துக்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்த பின் நாடாளுமன்ற உறுப்பினர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

விளையாட்டு பயிற்றுவிப்பாளர் பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்டத்தில் இருந்து அமைச்சரவை அனுமதி கிடைக்கும் வரை நான் தொடர்ச்சியாக விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள், கல்வி அமைச்சருடன் தொடர்பில் இருந்தவன் என்ற வகையில் இருபக்கத்திலும் இந்த நியமனத்தை பெறவும் வழங்கவும் மேற்கொண்ட முயற்சிகளையும் கஷ்டங்களையும் நன்கறிந்தவன் என்ற ரீதியிலும் இன்று இந்த நியமனத்துக்கான அனுமதி கிடைத்திருப்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நேர்முகத்தேர்வு முடிந்து தெரிவு செய்யப்பட்ட பயிற்றுவிப்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டபின் சிலரின் அரசியல் நிகழ்ச்சிநிரலால் நியமனம் வழங்க தாமதமானபோது கல்வி அமைச்சின் கண்காணிப்பு கண்காணிப்பு உறுப்பினராக நான் கல்வி அமைச்சருடன் இணைந்து இந்நியமனத்தை வழங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன்.

இதேவேளை, இன்று பல்வேறு முயற்சிகளின் பின் இந்நியமனத்துக்கான அமைச்சரவை அனுமதி பெற்று நியமனம் வழங்க நடவடிக்கை எடுத்த கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.