இலங்கை முழுவதிலும் 56 பேரின் உயிரை காவு வாங்கிய டெங்கு நோய்

Report Print Ajith Ajith in அறிக்கை

கடந்த டிசம்பர் 31ஆம் திகதி வரை இலங்கை முழுவதிலும் 56 பேர் டெங்கு பாதிப்பால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் 50,163 பேர் டெங்கு நோயின் தாக்கத்துக்கு உள்ளாகியிருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கொழும்பில் மாத்திரம், 10,051 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கம்பஹாவில் 5,604 பேரும், மட்டக்களப்பில் 4,817 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Latest Offers