அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் நிதியமைச்சு வெளியிட்டுள்ள மகிழ்சித் தகவல்!

Report Print Vethu Vethu in அறிக்கை

அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை இந்த மாதம் முதல் 2500 ரூபாவுக்கும் 10000 ரூபாவுக்கும் இடையில் அதிகரிப்பதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அரச சேவையில் கீழ்மட்ட ஊழியர்களின் அடிப்படை சம்பளம் இந்த மாதம் 2500 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது. உயர் அதிகாரிகளின் சம்பளத்தை 10000 ரூபாயிலும் அதிகரிப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு அரச ஊழியர்களுக்கு 10000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட்ட நிலையில், அந்த கொடுப்பனவு 2016ஆம் ஆண்டில் இருந்து 2020ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் பகுதி பகுதியாக அடிப்படை சம்பளத்துடன் இணைக்க தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய மற்றுமொரு கட்டமாக அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ஜனவரி மாதத்தில் இருந்து 2500 ரூபாய் - 10000 ரூபாயிலும் அதிகரிக்கப்படவுள்ளது.

அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும் நடவடிக்கையின் இறுதிக்கட்டம் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதேவேளை 2020ஆம் ஆண்டில் மற்றுமொரு பகுதி அடிப்படையிலான சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளது. இது 2500 தொடக்கம் 10000 ரூபா வரையில் அமையும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.