இராணுவ பிரதான அதிகாரிய சவேந்திர சில்வா நியமனம்! ஐ.நாவை ஏமாற்றிய இலங்கை

Report Print Ajith Ajith in அறிக்கை

இலங்கையின் இராணுவ பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, நியமிக்கப்பட்டமையை சர்வதேச தமிழர் பேரவை கண்டித்துள்ளது.

இது தொடர்பில் சர்வதேச தமிழர் பேரவை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,

சவேந்திர சில்வா, இராணுவ பிரதம தலைமையதிகாரியாக நியமிக்கப்பட்டமையானது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை ஏற்றுக்கொண்ட பரிந்துரைகளுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது என்பதை சர்வதேசத்துக்கு உணர்த்தும் செய்தியாகும் என்று விமர்ச்சிக்கப்பட்டுள்ளது.

அதுவும் எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பான மீளாய்வு நடத்தப்படவுள்ள நிலையில் இந்த பதவியுயர்வானது, நல்லிணக்கம் தொடர்பான பரிந்துரைகளை உண்மையாக நடைமுறைப்படுத்துவதில் தோல்வி என்ற அச்சத்தை சர்வதேசத்துக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் பேரவை குறிப்பிட்டுள்ளது.

சவேந்திர சில்வாவுக்கான இந்த பதவியுயர்வு தமிழ் சமூகத்தின் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான பொறுப்புக்கூறலிலும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

சவேந்திர சில்வா, மனிதத்துவத்துக்கு எதிராக போர்க்குற்றங்களை புரிந்தவர். இந்தநிலையில் அவர் உட்பட்ட குற்றம் புரிந்த இராணுவ அதிகாரிகளை பாதுகாக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதை இந்த தீர்மானம் உணர்த்துகிறது.

இந்தநிலையில், எதிர்வரும் மார்ச் மாதத்தில் இலங்கை தொடர்பான மீளாய்வு யோசனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும்போது அதனை எவ்வாறு சர்தேசம் எதிர்கொள்ளப்போகிறது என்பது சவாலான விடயமாகும்.

எனவே, சவேந்திர சில்வாவின் விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினர் நாடுகள், தமது பொறுப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றும் சர்வதேச தமிழர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.