இலங்கையில் இன்று முதல் புதிய நடைமுறை

Report Print Sujitha Sri in அறிக்கை

இலங்கையின் தேசிய பூங்காக்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக புதிய நடைமுறையொன்று இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அந்த வகையில் சுற்றுலாப் பயணிகளுக்கு இணையத்தள மூலமான அனுமதி சீட்டை விநியோகிப்பதற்கான வேலைத்திட்டமே நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஈ - நுழைவாயில் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இலங்கை சுற்றுலா மற்றும் முகாமைத்துவ நிறுவன கேட்போர் கூடத்தில் இன்று 11.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் இலகுவாக தேசிய பூங்காவை பார்ப்பதற்கான வசதி சுற்றுலா பயணிகளுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.