சர்வதேச நாணய நிதியம் விடுத்துள்ள அறிவிப்பு! இலங்கை வரும் குழு

Report Print Ajith Ajith in அறிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் குழு ஒன்று இலங்கைக்கு வரவுள்ளது. இந்த குழு எதிர்வரும் பெப்ரவரி நடு பகுதியில் இலங்கைக்கு வரவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிறிஸ்டின் லார்கட் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு மீண்டும் நிதியுதவி செய்யவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிதியமைச்சர் மங்கள சமரவீர, மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி உள்ளிட்ட குழுவினர் நேற்று வொசிங்டனில் வைத்து கிறிஸ்டினேயை சந்தித்தபோது அவர் தமது அறிவிப்பை வெளியிட்டார்.

மஹிந்த ராஜபக்ச திடீர் பிரதமரானதன் பின் இலங்கைக்கு வழங்க வேண்டிய கடன் உதவியை சர்வதேச நாணய நிதியம் நிறுத்தி வைத்திருந்தது.

எனினும் அவர் பதவிவிலகிய நிலையில் தமது திட்டத்தை தொடரவுள்ளதாக சர்வேதேச நாணய நிதியம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers