இலங்கை உட்பட்ட பல நாடுகளிலுள்ள வட்ஸ்அப் பாவனையாளர்களுக்கு விசேட அறிவிப்பு

Report Print Vethu Vethu in அறிக்கை

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பயன்பாட்டிலுள்ள சமூக வலைத்தளமான வட்ஸ்அப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போலியான தகவல்கள் வெளியாவதை தடுக்கும் நோக்கில் தமது சேவையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.

வட்ஸ்அப்பில் இருந்து நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளும் செய்தியை வரையறுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒரு செய்தியை ஐந்து முறை மட்டுமே ஒரு உறுப்பினரால் பகிர்ந்து கொள்ள முடியும்.

முன்னர் அங்கத்தவர்களினால் 20 முறைகள் ஒரே செய்தியை பகிர்ந்து கொள்ள கூடியதாக இருந்தது.

இந்த புதிய நடைமுறையின் மூலம் பிழையான தகவல்கள் வெளியாவதை கட்டுப்படுத்த முடியும் என நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சுமார் 6 மாத கால ஆய்வின் பின்னரே நிறுவனம் இந்த முறைமையை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பிரதான தொடர்பாடல் செயலியாக வட்ஸ்அப் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.