இலங்கையில் இருந்து தப்பியோடிய ஆபத்தான நபர்கள்! சொத்துக்களை முடக்கிய அரசு

Report Print Steephen Steephen in அறிக்கை

பிரபலமான 24 போதைப் பொருள் கடத்தல்காரர்கள் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்குவது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக தெளிவுப்படுத்து செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனை கூறியுள்ளார்.

நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ள இந்த குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இதற்கு அமைய அவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்கும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு விழிப்பூட்டும் நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்று வருகின்றன.

இலங்கையில் பாடசாலை மட்டத்திலும் ஹெரோயின் உட்பட போதைப் பொருள் பாவனை பரவி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers