இலங்கை படையினர் மீது தாக்குதல்! ஐ.நா பொதுச் செயலாளர் கண்டனம்

Report Print Kamel Kamel in அறிக்கை

மாலியில் கடமையாற்றி வரும் இலங்கை அமைதி காக்கும் படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு ஐ.நா அமைப்பின் பொதுச் செயலாளர் அன்டானியோ குட்டாரஸ் கண்டனம் வெளியியிட்டுள்ளார்.

மாலியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 இலங்கை அமைதி காக்கும் படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆழ்ந்த இரங்கலை இலங்கை அரசாங்கத்திற்கு தெரிவித்து கொள்வதுடன், சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென பிரார்த்திப்பதாக குட்டாரஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையினர் மீது தாக்குதல் நடத்துவது சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் போர்க்குற்ற செயலாக கருதப்படும் எனவும், தாக்குதல் நடத்தியவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.

இதேவேளை, தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.