தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த இலங்கையின் படையதிகாரி! வெளிவந்துள்ள புதிய தகவல்

Report Print Ajith Ajith in அறிக்கை

பிரித்தானியாவில் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த இலங்கையின் படையதிகாரி பிரியங்க பெர்ணான்டோ மீது பிரித்தானிய நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை திரும்ப பெற்று கொள்ளப்படவுள்ளது.

இலங்கையின் அரசாங்க தரப்பு செய்தித்தாள் இதனை தெரிவித்துள்ளது.

லண்டனில் நடைபெற்ற புலம்பெயர் தமிழர்களின் போராட்டத்தின் போது அவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் அண்மையில் பிரியங்கவுக்கு எதிராக பிடியாணை உத்தரவை பிறப்பித்தது.

இதனையடுத்து இலங்கை அரசாங்கம், ராஜதந்திர ரீதியில் இந்த பிரச்சினையை அனுகியது.

இந்தநிலையில் இந்த உத்தரவை விலக்கி கொள்ளுமாறு இலங்கையின் இராணுவத்தினர் சார்பில் பிரித்தானியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் எதிர்வரும் முதலாம் திகதி வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்யவுள்ளது

இதனடிப்படையிலேயே அவருக்கு எதிரான உத்தரவு விலக்கிக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், லண்டனில் கடமையாற்றியபோது பிரியங்கவுக்கு இருந்த ராஜதந்திர தகுதி குறித்து வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம், பொதுநலவாய நாடுகளின் செயலகத்திடம் விளக்கத்தை கோரியுள்ளதாக லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.