யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்கள்

Report Print Steephen Steephen in அறிக்கை

ஆவா குழுவுடன் சம்பந்தப்பட்ட மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் கிடைத்த தகவலை அடுத்தே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து இரண்டு வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 19, 23 மற்றும் 25 வயதான இளைஞகர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் நாச்சியம்மன் கோவிலடி பகுதியில் இரண்டு பேரை வெட்டி காயப்படுத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னர், சந்தேக நபர்கள் தப்பிச் சென்று தலைமறைவாகி இருந்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாளைய தினம் அடையாள அணி வகுப்பில் நிறுத்தப்படுவதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.