இலங்கைக்கு வாழ்த்து தெரிவித்த பிரித்தானிய மகா ராணி!

Report Print Vethu Vethu in அறிக்கை

இலங்கை அரசாங்கத்திற்கும் நாட்டு மக்களுக்கும் பிரித்தானிய இரண்டாவது மகாராணி எலிசபெத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கை 71வது சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகி வரும் நிலையில், பிரித்தானிய மகாராணியின் வாழ்த்து வெளியாகி உள்ளது.

சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ள இலங்கையர்களுக்கு சிறந்த சந்தர்ப்பங்கள் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய வாழ்த்துவதாக மகா ராணி தெரிவித்துள்ளார்.

“உங்கள் தேசிய நாள் கொண்டாட்டத்தில் பெருமைக்குரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எனது வாழ்த்துக்களை அனுப்பி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இலங்கை மக்களுக்கு சிறந்த அதிர்ஷ்டம் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய வாழ்த்துவதாக மகா ராணியின் வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 4ம் திகதி இலங்கையின் 71வது சுதந்திர தினம் காலி முகத்திடலில் மிகவும் சிறப்பாக கொண்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.