சுதந்திரம் நீடித்து நிலைத்திருக்க வேண்டும்! பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப்

Report Print Gokulan Gokulan in அறிக்கை

இலங்கை தேசத்தில் வாழும் அனைத்து இன மக்களும் தொடர்ந்து சுதந்திர வாழ்வுடைவர்களாக வாழ்வதற்கு சுதந்திரம் நீடித்து நிலைத்திருக்க வேண்டும் என பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 71ஆவது சுதந்திர தின வாழ்த்து செய்தியை தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

குறித்த வாழ்த்து செய்தியில்,

இலங்கை ஜனநாயகத்தின் வெற்றிக் கொண்டாட்டம் இவ் சுதந்திர தினம் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்பின் பிரகாரம் சுதந்திரம் அனைத்து இன வாழ் மக்களின் பிரகாரம் பாதுகாக்கப்படுவது ஒவ்வொரு இலங்கைப் பிரஜையின் கடப்பாடாகும்.

இன மத பேதமற்ற சிங்களம், முஸ்லிம், தமிழ் என்ற பாகுபாடற்ற முறையில் ஒற்றுமை சகோதரத்துவம் பரஸ்பரம் நல்லிணக்க முறையில் இலங்கை வாழ் சமூகம் தொடர்ந்தும் சுதந்திரமாக வாழ்வதற்கு இந்த சுதந்திர தினம் கைகொடுக்கவும் உறுதி பூண வேண்டும்.

இலங்கை நாடு காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றதன் பிற்பாடு இலங்கை தேசம் பெற்று கொண்ட சுதந்திரம் அனைத்து இன வாழ் சமூகத்தையும் அன்றைய கால கட்டத்தில் சுமூகமான நிலையில் காணப்பட்டது.

தற்போதைய சூழ்நிலையில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு சுதந்திர வாழ்வுடையவர்களாக யுத்த சூழ் நிலையற்ற சுதந்திரமாக வாழ்ந்து வருகிறோம்.

30வருட கால யுத்த சூழ் நிலையில் இருந்து நல்லிணக்க சூழ் நிலை தோற்றுவிக்கப்பட்டு ஜனநாயக முறையில் தற்போதைய நிலை காணப்படுவது வரவேற்கத்தக்கது.

இலங்கை தேசத்தை தொடர்ந்தும் சுதந்திரமான முறையில் ஜனநாய நீரோட்டத்துக்கு கட்டியெழுப்ப உறுதுனை பூணவேண்டும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers