நள்ளிரவில் நடத்தப்படும் பேஸ்புக் நண்பர்களின் விருதுகளால் ஏற்படும் அபாயம்!

Report Print Vethu Vethu in அறிக்கை

பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்படும் அனைத்து விருந்துகளையும் கடுமையாக சோதனையிடுமாறு, சகல பொலிஸ் அதிகாரிடமும், பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆலோசனை வழங்கியுள்ளார்.

இவ்வாறான விருந்துகள் போதை பொருள் வர்த்தகர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்படுவதாக தெரிய வந்துள்ளது.

இந்த விருந்தில் கலந்து கொள்பவர்களுக்கு விஷம் கலந்த போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பொலிஸ் மா அதிபர் இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.

அதற்கமைய பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்படும் இந்த விருந்து பொலிஸ் அதிகாரமிக்க பிரதேசங்களில் இடம்பெறுகின்றதா என தொடர்ந்தும் சோதனையிடுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சோதனையிடும் போது குறித்த இடங்களில் விஷம் கலந்த போதைப்பொருட்கள் இருப்பின், குறித்த விருந்தை ஏற்பாடு செய்த நபர்கள், அதற்காக உதவி வழங்கியவர்கள் மற்றும் விருந்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.