கிளிநொச்சியில் இருந்து கொழும்பு சென்ற 7 பேருக்கு ஏற்பட்ட விபரீதம்

Report Print Vethu Vethu in அறிக்கை

கிளிநொச்சியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சிலாபம் - கொழும்பு வீதியின் மாதம்பை பழைய நகரத்தில் இன்று அதிகாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இரண்டு வேன்கள் ஒன்றோடு ஒன்று மோதியமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த 4 பேரும் கிளிநொச்சியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் அவர்கள் படுகாயம் அடைந்துள்ள போதிலும் உயிராபத்து ஏற்படும் அபாயம் இல்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சியை சேர்ந்த 43 வயதான ஜெயக்குமார், 55 வயதான ஜீவரத்னம், 24 வயதான பவ்சியா, 56 வயதான யோகேஸ்வரன் மற்றும் ஆரச்சிகட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான அசிக மதுவந்த, 32 வயதான அமல் தனுஷ்க மற்றும் 36 வயதான ரசிகா ஆகியோரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.