பேர்ப்பச்சுவல் தவிசாளருக்கான விடுமுறைக்கு நீதிமன்றம் அனுமதி

Report Print Ajith Ajith in அறிக்கை

மத்திய வங்கி முறி மோசடி தொடர்பிலான விசாரணைகளில் தொடர்புபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள, பேர்ப்பச்சுவல் ட்ரசரீஸின் தவிசாளர் ஜெப்ரி ஜோசப் இந்தியாவுக்கு செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பமாகும் வகையில் ஒரு வாரத்துக்கு இந்த அனுமதி இன்று வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக மருத்துவ சிகிச்சைக்காக இரண்டு மாதங்களுக்கான விடுமுறையை அவர் கோரியிருந்தார்.

எனினும் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாத நிலையில் அந்த கோரிக்கையை கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.