வட மாகாணத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் புதிய நடைமுறை

Report Print Rakesh in அறிக்கை

வடக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் காலை வழிபாட்டுடன் உடற்பயற்சி, யோகா செய்வதை கட்டாயமாக்கியுள்ளது வட மாகாணகல்வி அமைச்சு.

முறையான உடற்பயிற்சி எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதை விளக்கும் வகையிலான இறுவட்டையும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

வட மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களை இணைத்து யோகா உடற்பயிற்சி காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது.

சுமார் 8 நிமிடங்களை கொண்டமைந்துள்ள இந்த காணொளியில் வரும் மூன்று உடற்பயிற்சிகளை மாணவர்கள் காலை வழிபாட்டின்போது மேற்கொள்ள வேண்டும்.

இது தொடர்பில் வலயங்களிலுள்ள விளையாட்டுத்துறை பொறுப்பாளர்களுக்கு 12ஆம் திகதி அறிவித்தல் வழங்கப்படுவதுடன், அவர்களுக்குப் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது.

எதிர்வரும் 18ஆம் திகதி முதல் மாகாணத்திலுள்ள தரம் 6 - 13 வரையுள்ள பாடசாலை மாணவர்கள் இரு நாட்கள் இந்த உடற்பயிற்சிகளை செய்யவேண்டும் என்று மாகாண கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.