அரசாங்கத்தின் புதிய திட்டம்

Report Print Kamel Kamel in அறிக்கை

ஓய்வு பெற்றுக்கொண்ட ஆசிரியர்களை மீளவும் பணியில் இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கஸ்டப் பிரதேச பாடசாலைகளில் நிலவி வரும் ஆசிரிய பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில் அரசாங்கம், ஓய்வு பெற்ற ஆசிரியர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதற்கு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் ஆசிரிய பற்றாக்குறைக்கு தீர்வு காணும் நோக்கில் ஓய்வு பெற்றுக் கொண்ட ஆசிரியர்களை பணியில் இணைத்துக் கொள்ளும் வகையிலான அமைச்சரவை பத்திரமொன்று சமர்ப்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

மாத்தளை - நாவுல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வு பெற்றுக்கொண்ட ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு ஒன்றை வழங்கி பணியில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers