2016ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு முன்னர் ஓய்வூதியம் பெற்றவர்களுக்கு அக்ரஹார காப்புறுதியைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
2016ம் ஆண்டின் பின்னர் ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியர்களுக்கு இந்தக் காப்புறுதி வழங்கப்பட்டு வருகிறது.
குறைந்த செலவிலான தொலைபேசி வசதியை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார்.
ஓய்வுபெறும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை தற்போது ஆறு இலட்சத்து 28 ஆயிரமாக காணப்படுகிறது. ஓய்வூதியம் பெற்று வெளிநாடுகளில் உள்ள அரச ஊழியர்களின் எண்ணிக்கை பெருந்தொகையாகும்.
வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கை ஓய்வூதியக்காரர்கள் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு அறிவிப்பது அவர்களது பொறுப்பாகும். இவ்வாறு அறிவிக்காமல் வெளிநாடுகளில் உள்ள ஓய்வூதியக்காரர்களுக்கு வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 2 ஆயிரம் ரூபா வழங்கப்படுகிறது.
நாட்டிலுள்ள ஓய்வூதியக்காரர்களுக்கு 3 ஆயிரத்து 525 ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக வழங்கப்படுகிறது.
2019ம் ஆண்டு ஓய்வூதியத்தை வழங்குவதற்காக ஓய்வூதியக்காரர்களின் குடியிருப்பு சான்றிதழ் முக்கியமானதாகும். இதற்காக வழங்கப்பட்டுள்ள கால எல்லை மார்ச் மாத்துடன் நிறைவு பெறுகிறது.
மோசடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.