கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கியமான அறிவித்தல்!!

Report Print Murali Murali in அறிக்கை

திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் 21 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளை மறுதினம் காலை 8 மணி முதல் மறுநாள் பிற்பகல் 5 மணி வரை 21 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

மஹரமக, பொரலஸ்கமுவ, கொட்டாவை, பன்னிபிட்டி, ருக்மல்கம, பெலன்வத்த, மத்தெகொட, ஹோமாகம, மீபே, பாதுக்கை போன்ற பிரதேசங்களில் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers