நிதி மோசடி விசாரணை பிரிவின் பொறுப்பாளர் தகவல்களை கசிய விட்டதாக குற்றச்சாட்டு

Report Print Kamel Kamel in அறிக்கை

நிதி மோசடி விசாரணை பிரிவின் பொறுப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்கார, தகவல்களை கசிய விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இரகசிய ஆவணங்கள் மற்றும் இரகசிய தகவல்கள் போன்றவற்றை சந்தேகநபர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளதாக ரவி வைத்தியலங்கார மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நிதி மோசடி விசாரணை பிரிவின் சில அதிகாரிகள் பாரியளவில் சொத்துக்களை குவித்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தும் நோக்கில் ரவி வைத்தியலங்கார உள்ளிட்ட சில அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

நிதி மோசடி விசாரணை பிரிவினால் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் தகவல்களை கசியவிட்டு அதற்கு சன்மானமாக பாரியளவில் பணத்தையும், பொருட்களையும் பெற்று கொண்டுள்ளதாக நிதி மோசடி விசாரணைப் பிரிவின் சில அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ரவி வைத்தியலங்கார கடந்த ஆண்டு ஓய்வு பெற்றுக் கொண்ட போதிலும் ஓராண்டு கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.