சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஊடக அறிக்கை!

Report Print Mohan Mohan in அறிக்கை

யாழ் ஊடக அமையத்தினால் கடந்த 26ஆம் திகதி ஜனாதிபதி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மகஜர் இன்று முல்லைத்தீவு ஊடக அமையத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

இவ்வாறு இன்று அனுப்பிவைக்கப்பட்ட மகஜரில், முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மையில் மூன்று ஊடகவியலாளர்கள் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் பல்வேறு ஊடகங்களினால் யாழ். ஊடக அமையம் அனுப்பிய மகஜர் தொடர்பான செய்தி வெளியீட்டில் முல்லைத்தீவில் இரண்டு ஊடகவியலாளர்கள் மட்டுமே இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களின் இருவரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ். ஊடக அமையம் இன்று முல்லைத்தீவு ஊடக அமையத்திற்கு அனுப்பிவைத்த மகஜர் தொடர்பில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

எவ்வாராயினும் அண்மையில் முல்லைத்தீவு இராணுவத்தினரால் ஒரே நாளில் மூன்று ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது