தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ள அரசாங்கம்

Report Print Steephen Steephen in அறிக்கை

தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு சம்பந்தமாக நிதியமைச்சு நடவடிக்கை எடுக்க உள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜே.சீ.அலவத்துவல தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

இதற்கு முன்னரும் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்ட போது, தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனடிப்படையில், தனியார் துறைக்கு அநீதி ஏற்படாத வகையில் அரசாங்கம் தீர்மானம் ஒன்றை எடுக்கும் எனவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.