முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னாகொட புலனாய்வுப் பிரிவில் முன்னிலை

Report Print Kamel Kamel in அறிக்கை

முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட குற்றப் புலனாய்வு பிரிவில் இன்றைய தினம் முன்னிலையாக உள்ளார்.

11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர் இன்றைய தினம் குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாக உள்ளார்.

கொலை, சூழ்ச்சித் திட்டம், கடத்தல், தகவல்களை மூடி மறைத்தல் போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கரன்னாகொடவை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இந்த சம்வத்துடன் கரன்னாகொடவிற்கு தொடர்பு உண்டு என விசாரணைகளின் மூலம் புலனாகியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

எனினும் வசந்த கரணாகொடவை கைது செய்ய தடைவிதித்த உயர் நீதிமன்றம் அவரை சீஐடியில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...