வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட இரண்டாவது நாளாக இன்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களம் இதற்கு முன்னர் கரன்னாகொடவிடம் 8 மணி நேரம் விசாரணைகளை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தது.
கொழும்பில் மாணவர்கள் உட்பட 11 இளைஞர்கள் கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.