சட்டபூர்வமாக நடந்த காதல் திருமணம்! வவுனியா பதில் தலைமை பொலிஸ் அதிகாரியிடம் விசாரணை

Report Print Theesan in அறிக்கை

வவுனியா பதில் தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரியும், சட்டத்தரணியுமான ஆர்.எல்.வசந்தராஜா தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தின் விசாரணை ஒன்றிற்கு அழைக்கப்பட்டு ஒத்துழைப்பு வழங்காமை மற்றும் ஒழுக்கம் தொடர்பாக கருத்தில் கொண்டு செயற்படாமையை கண்டறியப்பட்ட நிலையிலேயே இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

கடந்த வருடம் டிசம்பர் மாதம் வவுனியாவிலிருந்து இளைஞன் ஒருவரும், யுவதி ஒருவரும் புசல்லாவை சென்று சட்டபூர்வமாக காதல் திருமணம் செய்து கொண்டனர்.

எனினும் அந்த யுவதி கடத்தி செல்லப்பட்டுள்ளதாக முறையற்ற விதத்தில் வழக்கு தாக்கல் செய்த வவுனியா பதில் தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரியை குறித்த விடயம் தொடர்பில் நேற்றைய தினம் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் விளக்கமளிக்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அங்கு சென்ற பதில் தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி விசாரணைக்கு முகம்கொடுக்காமலும், ஒழுக்கம் தொடர்பான விடயங்களையும் பின்பற்ற தவறியமையை கண்டறிந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகம் அவருக்கு எதிராக பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொள்ளவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers