பொலிஸார் தேடும் இந்த பெண்ணை தெரியுமா?

Report Print Steephen Steephen in அறிக்கை

கெவூமா என்றழைக்கப்படும் கெலும் இந்திக சம்பத் என்ற போதைப்பொருள் விற்பனையாளுடன் சம்பந்தப்பட்டிருக்கும் பெண்ணொருவரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

துஷாரி என்று அழைக்கப்படும் மஹா உடுவகே தோன் நிரோஷா நில்மினி பெரேரா இந்த பெண் மொரட்டுவை கட்டுபெத்த பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரான 47 வயதான இந்த பெண்ணை பற்றிய தகவல்கள் கிடைத்தால், களனி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜயசிங்கவின் 071-8591589 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

கெவூமா என்ற சந்தேக நபர் அண்மையில், பேலியகொடை குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.