மட்டக்களப்பு போராட்டத்திற்கு தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி ஆதரவு

Report Print Steephen Steephen in அறிக்கை

வடக்கு, கிழக்கு மகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் எதிர்வரும் 19ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெற்றவுள்ள கடையடைப்பு மற்றும் கவனயீர்ப்பு பேரணிக்கு மட்டக்களப்பு மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி வாலிபர் முன்னணி பூரண ஆதரவை வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இன்றையதினம் குறித்த முன்னணி விடுத்துள்ள அறிக்கையில்,

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவுகளினால் எற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கடையப்பு போராட்டத்திலும் கவனயீர்ப்பு

பேரணியிலும் இன மத வேறுபாடுகளின்றி அனைவரும் கலந்துகொண்டு போராட்டத்திற்கு வலுசேர்க்க வேண்டுவதோடு இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியும் ஆதரவை வழங்குகிறோம் என தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் யுத்த காலத்திலும் யுத்தத்திற்குப் பின்னரும் இடம்பெற்ற கைதுகள் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்களில் தமது உடன்பிறப்புக்களை, கணவனை, மனைவியை, பெற்ற பிள்ளையை, தொலைத்துவிட்டு அந்த உறவுகள் இரவும் பகலுமாக பல வருடங்களாக போராடி அனுபவித்துவரும் வலிகளை வார்த்தைகளில் கூறிவிட முடியாது.

அந்த கண்ணீருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்காக நாம் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும்.

இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் இலங்கையில் நடைபெற்ற மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பான விடயங்கள் மட்டக்களப்பில் இடம்பெறும் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்துக்கு மறுநாளான எதிர்வரும் 20,03,2019ம் திகதி புதன் கிழமை ஆராயப்படவுள்ளது.

இந்த நாட்டில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் படுகொலைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பக்கச்சார்பற்ற முறையில் சர்வதேச விசாரணைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையினூடாக முறையாக முன்னெடுக்க வேண்டும்.

இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் சர்வதேசத்தை வலியுறுத்தும் இந்த தார்மீகப் போராட்டத்துக்கு இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணி பூரண ஆதரவினை வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.