நியூசிலாந்து பள்ளிவாயல் சம்பவம் பயங்கரவாதத்திற்கு இன மதம் இல்லை என்பதை நிரூபித்துள்ளது

Report Print Gokulan Gokulan in அறிக்கை

நியூசிலாந்து பள்ளிவாயல் துப்பாக்கி சூட்டு சம்பவம் பயங்கரவாதத்திற்கு இன, மதம் இல்லை என்பதை நிரூபித்துள்ளதென ராபிததுல் ஆலமி அல் இஸ்லாமின் கிழக்காசிய நாடுகளின் அதி உயர் சபை உறுப்பினர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தெரிவித்துள்ளதாவது,

இன்று நியூசிலாந்தில் இரண்டு பள்ளிவாயலில் ஜும்மா தொழுகைக்காக வருகை தந்தவர்களின் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டதுடன் 40 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இது மன்னிக்க முடியாத மிக மோசமான கோழைத்தனமான சம்பவமாகும். இவ்வாறான பயங்கரவாத செயலுக்கு இன,மத,மொழி,நாடு என்பது இல்லை என்பதை நிரூபித்துள்ளது.

அத்தோடு முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்தவர்கள் இன்று முஸ்லிம்களை கொல்லும் பயங்கரவாத சூழ்நிலையை சர்வதேச உலகம் இன்று ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

நியூசிலாந்து அரசு மாத்திரம் அல்ல உலகம் முழுவதும் முஸ்லிம்கள் எங்கெல்லாம் வாழுகிறார்களோ அவர்களின் மதக்கடமைகளையும், மதச்சுதந்திரத்தையும் அவர்களுக்கான அரசியல் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டியது அந்தந்த அரசுகளின் கடமையாகும்.

ஆகவே இது தொடர்பில் முஸ்லிம் வேர்ல்ட் லீக் உடனடியாக உலக நாடுகளின் தொடர்பை ஏற்படுத்தி இவ்வாறான பயங்கரவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்தி முழு உலக மக்களை மீட்டெடுப்பதற்கு எல்லோரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும்.

ராபிததுல் ஆலமி அல் இஸ்லாமி அமைப்பின் செயலாளர் நாயகம் அல் கரீம் ஈஸாயியை இன்னும் சில தினங்களில் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயங்கரவாத சம்பவத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். எதிர்காலத்திலே முஸ்லிம்கள் மீதான தாக்குதல் நடத்தப்படுவதை தடுப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பில் விரிவாக ஆராயந்து அறிக்கை ஒன்றை சர்வதேசத்திற்கு சமர்பிக்கவேண்டுமென்று ஹிஸ்புழ்ழாஹ் முஸ்லீம் வேர்ல்ட் லீக் செயலாளருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Offers