Christchurch தாக்குதல் சம்பவம்! இலங்கையர்களுக்கு பாதிப்பா?

Report Print Murali Murali in அறிக்கை

நியூசிலாந்து Christchurchஇல் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

Christchurch பகுதியில் அமைந்துள்ள இருவேறு பள்ளிவாசல்களில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் 49 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

அத்துடன், 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர். குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து நியூசிலாந்தில் குடியேறிவர்கள் பலர் இந்த தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், குறித்த சம்பவத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளதுடன், அங்குள்ள நிலைமைகள் குறித்து கண்காணித்து வருவதாகவும் கூறியுள்ளது.

Latest Offers