வெளிநாடு செல்ல நாமலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

Report Print Steephen Steephen in அறிக்கை

நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து கொண்டு மோசடியான முறையில் சம்பாதித்த 15 மில்லியன் ரூபா பணத்தை என்.ஆர்.கன்ஸ்சல்டன் நிறுவனத்தில் முதலீடு செய்தமை தொடர்பான விசாரணைக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உட்பட 5 சந்தேகநபர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயண தடையை நீக்க நடவடிக்கை எடுப்பதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சந்தேகநபர்கள் வெளிநாடு செல்ல மேல் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தால், தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவால் அதற்கு பாதிப்பு ஏற்படாது எனவும் நீதவான் தெரிவித்துள்ளார்.

விசாரணைகள் முடிவடைந்துள்ளதால், வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்குமாறு நாமல் ராஜபக்ச உட்பட சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.

சந்தேகநபர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த தடை நீக்கப்படுவதை தாம் எதிர்க்கவில்லை என பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனையடுத்தே நீதவான் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

மோசடியான முறையில் சம்பாதித்த பணத்தை நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்தன் மூலம் நாமல் ராஜபக்ச உட்பட சந்தேகநபர்கள் பணச் சலவை சட்டத்தின் கீழ் குற்றம் செய்துள்ளதாக கூறி, பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.

Latest Offers