மைத்திரிக்காக திடீரென முளைத்த வாழை மரக்கன்றுகள்

Report Print Kamel Kamel in அறிக்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணம் செய்த பாதையில் வாழைக் கன்றுகளை நாட்டிய இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அரலகங்வில பகுதியில் நேற்று முன்தினம் குறித்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் மானம்பிட்டி நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டதுடன் அவரை எதிர்வரும் 5ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரலகங்கவில பகுதியைச் சேர்ந்த ஆர்.எம். சரத் ரத்நாயக்க என்ற நபரையே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அரலகங்கவில முதல் விஜயபாபுர பகுதிப் பாதை சேதமடைந்துள்ள நிலையில் இது குறித்து ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் வாழைக் கன்றுகள் நாட்டப்பட்டுள்ளன.

இதனை அவதானித்த பொலிஸ் உத்தியோகத்தர் சந்தேக நபரின் செயற்பாட்டை அவதானித்து அவரை கைது செய்துள்ளார்.

Latest Offers