பாடகர்களுக்கும், இசையமைப்பாளர்களுக்கும் கொடுப்பனவுகளை செலுத்த வேண்டும்

Report Print Ajith Ajith in அறிக்கை

இலங்கையில் செயற்படும் வானொலிகள் மற்றும் தொலைக்காட்சிகள் என்பவை பாடகர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் இசைக்கலைஞர்களுக்கு உரிமைக்கொடுப்பனவுகளை செலுத்த வேண்டும் என்ற யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த யோசனையை முன்வைத்திருந்தார். இதன்படி பாடல்கள் ஒலி, ஒளிப்பரப்படும் நேரங்களுக்கெல்லாம் இந்த கொடுப்பனவுகள் செலுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு புலமைச் சொத்துக்கள் சட்டத்தின்கீழ் இந்த கொடுப்பனவுகள் செலுத்தப்பட வேண்டும் என்று யோசனையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த யோசனைக்கு அமைய ஆகக்குறைந்தது ஒரு பாடலுக்கு அந்தப்பாடலின் ஒரு பகுதியை ஒலி - ஒளி பரப்பும் போது அதற்காக 3 ரூபா செலுத்தப்படவேண்டும்.

இந்த தொகை குறைந்த பெறுமதியை கொண்டது என்ற அடிப்படையில் இன்னும் மூன்று மாதங்களுக்குள் திருத்தம் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் அதனை நிறைவேற்றுவது என்றும் அமைச்சரவை இணங்கியது.

பாடல்கள், பிழையான முறையில் பயன்படுத்தப்படுவதை தடுக்கவே இந்த முறை கொண்டு வரப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் யோசனையில் தெரிவிக்கப்படடுள்ளது.

Latest Offers